தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஒருதலைபட்சமான ஆட்சி: மேயர் பிரியா

ஒருதலைபட்சமான ஆட்சி: மேயர் பிரியா

ஒருதலைபட்சமான ஆட்சி: மேயர் பிரியா


ADDED : ஆக 28, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, மே 29–

‘‘தமிழகத்தில் ஒருதலைபட்சமான முறையில் ஆட்சி நடக்கிறது,’’ என, மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா அளித்த பேட்டி:

அரசுக்கு எதிரான எங்களை எதிர்ப்பை, கறுப்பு உடை அணிந்து பதிவு செய்தோம். அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

வார்டு மேம்பாட்டு நிதி, மாமன்ற உறுப்பினர்களுக்கான உரிமைகளை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது. ஆட்சியாளர்கள் ஒருதலைபட்சமாக ஆட்சி நடத்துகின்றனர். நாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். மாநகராட்சிக்கு நிதி விடுவிப்பது குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளோம். நேரம் வரும்போது முதல்வரை சந்திப்போம்.

மெரினா கடற்கரையில் ரோப்கார் அமைப்பது தொடர்பாக மண் பரிசோதனை, சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இப்பகுதி கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதியில் வருவதுடன், ஆமைகள் முட்டையிடும் சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இயற்கை பேரிடர்களை தாங்கும் திறன் மற்றும் பாதுகாப்பு சவால்கள் இருப்பதால், மற்றொரு தனியார் நிறுவனம் வாயிலாகவும் மறுஆய்வு செய்யப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us