ADDED : நவ 28, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
சென்னை: ‘அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகத்தில், நாளை முதல் பிரத்யேக ஆதார் சேவை மையம் செயல்படத் தொடங்கும்’ என தபால் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தபால் துறை வெளியிட்ட அறிக்கை:
அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகத்தில் தொடங்கப்படும் இந்த ஆதார் சேவை மையம், தினமும் காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை செயல்படும். இதன் வாயிலாக பொதுமக்கள் நீட்டிக்கப்பட்ட நேரத்தில் ஆதார் தொடர்பான பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.
ஆதார் புதிய பதிவு, ஏற்கனவே உள்ள ஆதார் அட்டையில் விபரங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். குறிப்பாக, வழக்கமான அலுவலக நேரங்களில் ஆதார் சேவைகளைப் பெறுவதில் சிரமம் உள்ள பணிபுரிவோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த நீட்டிக்கப்பட்ட சேவை நேரம் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
