ADDED : மார் 10, 2026 05:20 AM
சென்னை: பதவி உயர்வு ஆணை வழங்கப்படாததை கண்டித்து, சென்னை பல்கலை பேராசிரியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை பல்கலையில் பணியாற்றும், உதவி பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு நேர் காணல், பல்கலை வளாகத்தில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்தது; அதற்கு, சிண்டிகேட் ஒப்புதலும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதில், தேர்வான பேராசிரியர்களுக்கு, பதவி உயர்வுக்கான ஆணை வழங்கப்படவில்லை என, குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இதை கண்டித்து, சென்னை பல்கலை ஆசிரியர் பேரவை சார்பில், பல்கலை வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், பேராசிரியர்களுடன், உயர்கல்வித்துறை மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பேராசிரியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
