/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பில்லாத அரசு பள்ளி வளாகம் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சம்
/
பராமரிப்பில்லாத அரசு பள்ளி வளாகம் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சம்
பராமரிப்பில்லாத அரசு பள்ளி வளாகம் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சம்
பராமரிப்பில்லாத அரசு பள்ளி வளாகம் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சம்
ADDED : ஜூலை 21, 2025 03:31 AM

சித்தாலப்பாக்கம்:பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம் சித்தாலப்பாக்கம்- - காரணை சாலையை ஒட்டி, ஏழு ஏக்கர் பரப்பளவில், அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது.
இப்பள்ளியில், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன் கழனி, நுாக்கம் பாளையம், வேங்கைவாசல் பகுதிகளில் இருந்து, ஏழை குடும்பங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.
இந்த பள்ளி, சாலையின் மட்டத்தை விட தாழ்வாக அமைந்துள்ளதால், மழைக்காலங்களில் சாலையில் சேகரமாகும் நீர், பள்ளி வளாகத்தில் புகுந்து விடுகிறது. அவ்வாறு வரும் நீர், வெளியேற வழியில்லாமல் குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளி மாணவ - மாணவியர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பள்ளி வளாகத்தில் குளம் போல் அமைந்துள்ள பகுதியை சுற்றி செடி, கொடிகள் உள்ளதாலும், அருகில் வசிப்பவர்கள், குப்பை கழிவுகளை வீசி எரிவதாலும், பாம்பு, கீரி, எலி போன்றவை, சர்வசாதாரணமாக பள்ளி வளாகத்தை வலம் வருகின்றன.
இதனால், பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பவே அச்சமாக உள்ளது. தவிர, பள்ளியின் விளையாட்டுத் திடல் சுருங்கி உள்ளது. இதனால், உடற்பயிற்சி வகுப்பு பாதிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் நீர் தேங்காதவாறு மண்ணை கொட்டி சமன்படுத்தி, மழை நீர் வெளியேற கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்