/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2025 03:53 AM
சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் தொகு ப்பு சட்டங்களை திரும்பப் பெறுவது உட்பட, 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு , மண்பாண்ட தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சேமநாராய ணன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின் பொதுச் செயலர் லீலாவதி கூறியதாவது:
சமீபத்தில் மத்திய அரசு, 44 தொழிலாளர்கள் சட்டங்களை ரத்து செய்து, நான்கு புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை வெளியிட்டு உள்ளது.
இதை உடனடியாக பிரதமர் திரும்ப பெற வேண்டும்.
தமிழக அரசு இச்சட்டங்களுக்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
அதேபோல, பழங்குடியினர், நரிக்குறவர், புதிரை வண்ணார், துாய்மை பணியாளர் உள்ளிட்ட நல வாரியங்களை, மத்திய - மாநில அரசுகள் மேம்படுத்தி ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை மற்றும் வீட்டு வசதி உள்ளிட்ட நலத்திட்டங்களை முறையாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

