/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விற்பனையின்றி குப்பையில் கொட்டப்படும் கத்திரிக்காய்
/
விற்பனையின்றி குப்பையில் கொட்டப்படும் கத்திரிக்காய்
விற்பனையின்றி குப்பையில் கொட்டப்படும் கத்திரிக்காய்
விற்பனையின்றி குப்பையில் கொட்டப்படும் கத்திரிக்காய்
ADDED : செப் 29, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு, கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து, கத்திரிக்காய் வரத்து உள்ளது. கோயம்பேடு சந்தைக்கு, தினமும் 150 -- 200 டன் கத்திரிக்காய் தேவையுள்ளது.
தற்போது, விளைச்சல் அதிகரித்து, 300 - 350 டன் கத்திரிக்காய் வரத்து உள்ளது. இதனால், 20 -- 25 ரூபாய்க்கு விற்பனையான கத்திரிக்காய், 10 -- 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தும், விற்பனையின்றி அதிகளவில் தேங்கியும் வருகிறது. இதனால், தேங்கி அழுகும் கத்திரிக்காய் குப்பையில் கொட்டப்படுகிறது.