/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நண்பரை கொன்று டில்லியில் பதுங்கிய உ.பி., நபர் கைது
/
நண்பரை கொன்று டில்லியில் பதுங்கிய உ.பி., நபர் கைது
நண்பரை கொன்று டில்லியில் பதுங்கிய உ.பி., நபர் கைது
நண்பரை கொன்று டில்லியில் பதுங்கிய உ.பி., நபர் கைது
ADDED : ஜன 31, 2025 12:21 AM
யானைகவுனி,சவுகார்பேட்டை, பொன்னப்பன் தெருவில் ஹரிஷ்குமார், 29, என்பவருக்கு சொந்தமான 'ஸ்டீல் பட்டறை' உள்ளது. இங்கு, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சதாப், 20, தங்கி வேலை பார்த்தார்.
கடந்த, 25ம் தேதி இரவு, முகமது சதாப்பை பார்க்க, அவர் நண்பரான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சலீம், 28, என்பவர் வந்துள்ளார். இருவரும் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த முகமது சலீம், அங்கிருந்த எடைக்கல்லை துாக்கி, முகமது சதாப்பின் தலையில் அடித்து தப்பியோடினார்.
இதில், முகமது சதாப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து யானைக்கவுனி போலீசார் விசாரித்தனர். இதில், முகமது சலீம், ரயில் மார்க்கமாக டில்லி சென்றது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார், டில்லியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். பின், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று, சென்னை அழைத்து வந்தனர்.