ADDED : நவ 29, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
ஓட்டேரி: பெண்ணிடம் அத்துமீறிய உ.பி., நபரான மனிஷ் ரத்தோர், 47, என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓட்டேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 34 வயது பெண், நேற்று (நவ.,28) தன் குழந்தைகளை வீட்டின் அருகே டியூஷனுக்கு விட்டு, வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வடமாநில வாலிபர் ஒருவர், அப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அப்பெண் கூச்சலிடவே, அங்கிருந்தோர் அந்நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, ஓட்டேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்ததில், உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மனிஷ் ரத்தோர் என்பதும், மதுபோதையில் அத்துமீற முயன்றதும் தெரிந்தது. அவரை கைது செய்து, இன்று (நவ.,29) சிறையில் அடைத்தனர்.
