ADDED : ஜன 27, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார் மண்டலம், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில், 9 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பல சாலைகள், பருவமழைக்கு பின் மிகவும் மோசமாகின.
அதுபோன்ற சாலைகளை சீரமைக்க, கவுன்சிலர்கள், நலச்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 95 தெருக்களில் 20 கி.மீ., நீள சாலைகளை புதுப்பிக்க மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது.
இதில், 25 தெருக்கள் சிமென்ட் சாலையாகவும், 70 தெருக்கள் தார் சாலையாகவும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணி, அடுத்த மாதம் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.
