ADDED : மே 19, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார்:எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு வளாகத்தில், எண்ணுார் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, உதவி கமிஷனர் மற்றும் அனைத்து மகளிர் காவல் துறை செயல்படுகிறது.
காவல் நிலையமருகே, நேற்று மாலை திருநங்கையர் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டனர். இதை உடனிருந்த சில திருநங்கையர் தடுக்க முற்பட்டனர். இதன் காரணமாக, அங்கு பெரும் சலசப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசார் இருவரையும் அழைத்து, கண்டித்து அனுப்பினர்.