/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகர்புற மேம்பாட்டு வாரிய முன்மாதிரி குடியிருப்பு கேரளாவையடுத்து குஜராத்திலும் கட்ட முடிவு
/
நகர்புற மேம்பாட்டு வாரிய முன்மாதிரி குடியிருப்பு கேரளாவையடுத்து குஜராத்திலும் கட்ட முடிவு
நகர்புற மேம்பாட்டு வாரிய முன்மாதிரி குடியிருப்பு கேரளாவையடுத்து குஜராத்திலும் கட்ட முடிவு
நகர்புற மேம்பாட்டு வாரிய முன்மாதிரி குடியிருப்பு கேரளாவையடுத்து குஜராத்திலும் கட்ட முடிவு
ADDED : டிச 09, 2024 03:42 AM

சென்னை:சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள, மத்திய அரசின் ‛லைட் ஹவுஸ்' திட்ட அடுக்குமாடி குடியிருப்பை போல், குஜராத்திலும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அம்மாநில வீட்டுவசதி திட்ட உயர் அதிகாரி, நேற்று, குடியிருப்பை பார்வையிட்டார்.
பெரும்பாக்கம், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 200 ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கு, மத்திய அரசின், லைட் ஹவுட் திட்டத்தில், 116 கோடி ரூபாயில், 1,152 வீடுகள் கட்டப்பட்டன. ஆறு மாடி கொண்ட அடுக்குமாடியில், ஒவ்வொரு வீடும், 400 சதுர அடி பரப்பு கொண்டது. கட்டடத்தின் பாகங்களை தனி இடத்தில் தயாரித்து, அவற்றை கட்டுமான தளத்திற்கு கொண்டு சென்று, ‛பிரிகாஸ்ட்' முறையில்,
‛பி.ஜிஷிர்கே' என்ற நிறுவனம் கட்டியது.
இது இந்தியாவின், முன்மாதிரி அடுக்குமாடியாக கட்டப்பட்ட முதல் குடியிருப்பு. இந்த குடியிருப்பை, 2022 மே 2ம் தேதி, பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த குடியிருப்பை போல், கேரளாவிலும் கட்ட திட்டமிட்டு, கடந்த ஆண்டு அம்மாநில வருவாய் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் ராஜன், குடியிருப்பை பார்வையிட்டார்.
அதேபோல், ஜெர்மன் நாட்டு அதிகாரியும் பார்வையிட்டார். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இதேபோன்று குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, குஜராத் மாநில வீட்டுவசதி திட்ட உயர் அதிகாரி பவின்பட்டேல், நேற்று, குடியிருப்பை பார்வையிட்டார். அப்போது, வாரிய அதிகாரிகள் மற்றும் கட்டுமான நிறுவன அலுவலர்கள், இத்திட்டம் தொடர்பாக, ஆவணங்கள் அடிப்படையிலும், காணொலி வாயிலாகவும் விளக்கி கூறினர். பின், மாதிரி வீட்டை காட்டி, அதன் வசதிகள், கட்டமைப்பு குறித்து விளக்கினர்.