/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகரமைப்பு பிரிவு இணையவழி சேவை நிறுத்தம்
/
நகரமைப்பு பிரிவு இணையவழி சேவை நிறுத்தம்
ADDED : ஜூலை 25, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மாநகராட்சியில், இணையவழி சேவைகளின் பயன்பாடுகள், பாதுகாப்பு, கிடைக்கும் தன்மை, அளவிடுதல் ஆகியவை நவீனப்படுத்தப்பட உள்ளன.
அத்துடன் சென்னை மாநகராட்சி சேவைகள், மாநில தரவு மையத்துடன் இட பெயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால், மாநகராட்சி நகரமைப்பு பிரிவு தொடர்பான சேவைகள், நாளை காலை 6:00 முதல் 28ம் தேதி காலை 6:00 மணி வரை நிறுத்தம் செய்யப்படுவதாக, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.