/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரதராஜபுரம் அடையாறு கால்வாயை துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
/
வரதராஜபுரம் அடையாறு கால்வாயை துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
வரதராஜபுரம் அடையாறு கால்வாயை துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
வரதராஜபுரம் அடையாறு கால்வாயை துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2025 12:33 AM

குன்றத்துார், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், வரதராஜபுரம் பகுதியை கடந்து செல்லும் அடையாறு கால்வாயை துார் வார வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில் வரதராஜபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. ஆதனுார், ஒரத்துார், சோமங்கலம் ஆகிய பகுதிகளில் துவங்கும் அடையாறு கிளை கால்வாய், வரதராஜபுரத்தில் இணைந்து, சென்னை பட்டினப்பாக்கம் கடலில் கலக்கிறது.
ஆண்டுதோறும் வட கிழக்கு பருவமழை காலத்தில், அடையாறு கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால், வரதராஜபுரம் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. வெள்ள பாதிப்பை தடுக்க, அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வட கிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், வரதராஜபுரத்தை கடந்து செல்லும் அடையாறு கால்வாயில் வளர்ந்து கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, துார் வார வேண்டும் என, பொது மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வரதராஜபுரம் நல மன்றங் களின் கூட்டமைப்பு தலைவர் வி.ராஜசேகரன் கூறியதாவது:
அடையாறு ஆற்றை உடனடியாக துார் வார வேண்டும். கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு அடையாறு ஆற்றில் ஆகாயத்தாமரை அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கிறது. இவற்றை அகற்றினால் தான், மழைக்காலத்தில் வெள்ள நீர் தடையின்றி வெளியேறும்.
கடந்த 2023ம் ஆண்டு, கரை உடைந்த சில பகுதிகளில் தடுப்பு சுவர் கட்டப்படவில்லை. இந்த பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். கரையை உயர்த்தி பலப்படுத்த வேண்டும். இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.