/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி முதியோர் நல மருத்துவமனை கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்
/
கிண்டி முதியோர் நல மருத்துவமனை கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்
கிண்டி முதியோர் நல மருத்துவமனை கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்
கிண்டி முதியோர் நல மருத்துவமனை கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : மே 05, 2025 04:14 AM
சென்னை: 'சென்னை கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டமைப்பை, அரசு மேம்படுத்த வேண்டும்' என, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை வலியுறுத்திஉள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் உள்ள, 50 டாக்டர்கள் பணியிடங்களில், 33 பேர் மட்டுமே உள்ளனர். முதியோர் நலத் துறை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் என, 24 பேர் இருக்க வேண்டும்; 14 பேர்தான் உள்ளனர்.
அதேபோல், 75 நர்ஸ்கள் இருக்க வேண்டிய இடத்தில், 56 பேர் இருப்பதாக கணக்கு காட்டப்படுகிறது. ஆனால், 26 பேர் பிற மருத்துவமனைகளில் இருந்து மாற்றுப் பணியாக வந்துள்ளனர்.
அதாவது, 30 நர்ஸ்கள் மட்டுமே இந்த மருத்துவமனையை சேர்ந்தவர்கள். அவர்களில் 10 பேர் மகப்பேறு விடுப்பில் உள்ளனர். மூன்று பேர் நீண்ட காலமாக பணிக்கு வரவில்லை.
நர்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நிரந்தரமாக இல்லாமல், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த மாதத்திற்கான ஊதியம், இந்த மருத்துவமனையில் இதுவரை தரப்படவில்லை. ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.
முதியோர் நல மருத்துவமனையில், போதிய டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை, தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு பெருமாள்பிள்ளை தெரிவித்து உள்ளார்.