/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுண்துளை சிகிச்சையில் சிறுநீர்ப்பை கட்டி அகற்றம்
/
நுண்துளை சிகிச்சையில் சிறுநீர்ப்பை கட்டி அகற்றம்
ADDED : டிச 20, 2024 12:41 AM
சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனையில், 85 வயது முதியவரின், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை கட்டியை, நுண்துளை செயல்முறையில் டாக்டர்கள் அகற்றினர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் சிறுநீர் பாதையியல் நிபுணர் ஆர்த்தி கூறியதாவது:
சென்னையைச் சேர்ந்த, 85 வயதான முதியவர், நீண்ட காலமாக சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு, சிறுநீரில் ரத்தம் வெளியேறும் பாதிப்பும் இருந்தது.
அவரை பரிசோதித்தபோது, இயல்புக்கு மாறாக சிறுநீரகம் அமைந்திருந்தது. மேலும், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை இரண்டிலும் புற்றுநோய் கட்டி இருந்தது. மிகவும் சிக்கலான நிலையில் இருந்த ஒரு செ.மீ., நீளமுள்ள கட்டியை, நுண்துளை செயல்முறையில், உடம்பில் சிறிய கீறல்கள் வாயிலாக, எண்டோஸ்கோப்பி முறையில், அக்கட்டி அகற்றப்பட்டது.
மீண்டும் புற்றுக்கட்டி வராமல் தடுக்க, சிறுநீர்ப்பைக்குள் நேரடியாக மருந்தை செலுத்தும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.