/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் ஆபாச சைகை உத்தர பிரதேச வாலிபர் கைது
/
பெண்ணிடம் ஆபாச சைகை உத்தர பிரதேச வாலிபர் கைது
ADDED : நவ 26, 2025 03:19 AM

வேளச்சேரி: வேளச்சேரி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம், ஆபாச சைகை காட்டிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திருவாரூரை சேர்ந்த 25 வயது பெண், சோழிங்கநல்லுாரில் தங்கி, வேளச்சேரியில் ஒரு கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது, அருகில் நின்ற 30 வயது மதிக்கத்தக்க நபர், அப்பெண்ணிடம் ஆபாசமாக சைகை காட்டினார். இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
பெண் அளித்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் விசாரணையில், உத்தர பிரதேசம் மாநிலம், நந்து நகர் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார், 30, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இவர், அண்ணா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்தார். நேற்று இவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

