/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெருநாய்களுக்கு தடுப்பூசி முகாம் இன்று துவக்கம்
/
தெருநாய்களுக்கு தடுப்பூசி முகாம் இன்று துவக்கம்
ADDED : ஆக 06, 2025 12:14 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று துவங்கி, செப்டம்பர் மாதம் முதல் நடக்கிறது.
தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில், 45,000 தெரு நாய்கள் மற்றும் 4,000 முதல் 5,000 வரை வீட்டு வளர்ப்பு நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று துவங்கி, செப்டம்பர் மாதம் முதல் வாரம் வரை நடக்கிறது.
மாநகராட்சியில் உள்ள வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்களுக்கு, வார்டு வாரியாக, முக்கிய தெருக்களில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில், மண்டல வாரியாக, 10 தடுப்பூசி செலுத்தும் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும், இரு கால்நடை மருத்துவர்கள், இரு துாய்மை பணியாளர்கள், இரு வாகன ஓட்டுநர்கள் மற்றும் நாய் பிடிக்கும் பயிற்சி பெற்ற ஐந்து பணியாளர்கள் உள்ளனர். மொத்தம், 125 நபர்களை கொண்டு, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவும் தினம் 100 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள், தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை அருகிலுள்ள முகாம்களுக்கு அழைத்து சென்று, தடுப்பூசி செலுத்துமாறு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.