ADDED : நவ 21, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வடபழனி 100அடி சாலை எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து இருக்கும். அங்கு, சிறிய விபத்து ஏற்பட்டால் கூட, வாகன நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த போலீசார் போராடுவர். ஆனால், இச்சாலையில் நடக்கும் பணிகளால் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் வடிகால் பணிகளால், தினசரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். நெரிசல் அதிகமுள்ள சாலைகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மா.தவசி, வடபழனி.