/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பின்றி அசுத்தமான வைத்தீஸ்வரன் கோவில் குளம்
/
பராமரிப்பின்றி அசுத்தமான வைத்தீஸ்வரன் கோவில் குளம்
பராமரிப்பின்றி அசுத்தமான வைத்தீஸ்வரன் கோவில் குளம்
பராமரிப்பின்றி அசுத்தமான வைத்தீஸ்வரன் கோவில் குளம்
ADDED : அக் 22, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி நகராட்சியில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் செவ்வாய் தலமாக இக்கோவில் கருதப்படுகிறது. கோவிலின் கிழக்கு புறம் வினை தீர்த்த குளம் உள்ளது.
இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால், முறையான பராமரிப்பில்லாத காரணத்தால், குளத்தை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளன.
அருகில் உள்ள குடியிருப்பில் இருந்து குளத்தை சுற்றி குப்பை கொட்டப்படுகிறது. இவை காற்றில் பறந்து குளத்தில் விழுந்து அசுத்தமாகி வருகிறது.
கோவில் குளத்தை சுத்தமாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
- துர்கா, பூந்தமல்லி.