/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் கைது
/
விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் கைது
ADDED : ஜூலை 11, 2025 12:30 AM
சென்னை,சாலை விபத்தில் பெண் உயிரிழப்பிற்கு காரணமான வேன் ஓட்டுநரை அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.
எழும்பூர், வரதராஜபுரம் சேஷகிரி தெருவைச் சேர்ந்தவர் தேவி, 46. நேற்று முன்தினம், மகன் மற்றும் மகளை டவுட்டனில் உள்ள பள்ளியில் இறக்கிவிட்டு, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே, அவ்வழியாக வந்த டாடா ஏஸ் சரக்கு வேன் மோதியதில் வாகனத்துடன் விழுந்த தேவியின் தலையில், சரக்கு வேனின் பின் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.
வழக்கு பதிவு செய்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்தி வாகனத்துடன் தப்பிய திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 23, என்பவரை நேற்று கைது செய்தனர்; விபத்து ஏற்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.