/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வனவாணி பள்ளி முதல்வர் ' சஸ்பெண்ட் '
/
வனவாணி பள்ளி முதல்வர் ' சஸ்பெண்ட் '
ADDED : டிச 05, 2024 12:17 AM
சென்னை, சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் போது மனிதர்கள் எந்த அளவுக்கு சோதனையை தாங்குகின்றனர் என்பதை அளவிடுவதே இந்த தாங்கு திறன் சோதனை.
இதற்காக, பெற்றோரின் அனுமதியின்றி பள்ளியில் மாணவர்களை ஓட வைத்து, சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாணவர்களுக்கு மாத்திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, புதிய முதல்வராக பிரின்சிடாம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இப்புகார் குறித்து விசாரிக்க, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் நாளை ஆஜராக தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.