/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வருவாய் மாவட்ட 'ஹேண்ட்பால்' வனவாணி பள்ளி முதலிடம்
/
வருவாய் மாவட்ட 'ஹேண்ட்பால்' வனவாணி பள்ளி முதலிடம்
ADDED : நவ 24, 2024 12:24 AM
சென்னை,சென்வை வருவாய் மாவட்ட அளவிலான நடந்த ஹேண்ட்பால் போட்டியில், வனவாணி பள்ளி முதலிடத்தை பிடித்தது. அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
வடசென்னை மற்றும் தென்சென்னை அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, மாவட்ட அளவிலான போட்டிகள் நடக்கின்றன.
அதன்படி, வருவாய் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி, கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
போட்டியில், 23 மண்டலங்களில் வெற்றி பெற்ற அணிகள் மட்டும் பங்கேற்றன. இருபாலரிலும் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
மாணவருக்கான 14 வயது பிரிவில், திருவொற்றியூர் சங்கரா மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், புரசைவாக்கம் அனிதா மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும், மயிலாப்பூர் ஆர்.கே.எம்.ஆர்., பள்ளி மற்றும் சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் பள்ளி மூன்று மற்றும் நான்காம் இடத்தையும் பிடித்தன.
அதைத் தொடர்ந்து, 17 வயது மாணவர் பிரிவில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ், மயிலாப்பூர் ஆர்.கே.எம்.,பள்ளி, பெரம்பூர் வி.ஓ.சி., பள்ளி, சோழிங்கநல்லுார் ஏலன் ஷர்மா பள்ளி அணிகள், முதல் நான்கு இடங்களை பிடித்தன. அதேபோல், 17 வயது மாணவியர் பிரிவில், கிண்டி ஐ.ஐ.டி., வளாகத்தில் செயல்படும், வனவாணி பள்ளி முதலிடத்தை பிடித்தது.
ஆண்கள் 19 வயது பிரிவில், ராயபுரம் செயின்ட் மேரிஸ், தண்டையார்பேட்டை செயின்ட் பீட்டர்ஸ், போரூர் செயின்ட் ஆன்ஸ், சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் பள்ளி ஆகியவை முதல் நான்கு இடங்களை கைப்பற்றின. மாணவியர் 19 வயது பிரிவில், திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் பள்ளி முதலிடத்தையும், தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. போட்டியில் முதலிடங்களை பிடித்த பள்ளிகள் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.