/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு தயாராகும் வண்டலுார் பூங்கா
/
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு தயாராகும் வண்டலுார் பூங்கா
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு தயாராகும் வண்டலுார் பூங்கா
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு தயாராகும் வண்டலுார் பூங்கா
ADDED : ஜன 05, 2024 12:18 AM
தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், பொங்கல் பண்டிகை கூட்டத்தை சமாளிக்கவும், பூங்காவின் இயற்கை சூழல் பாதிக்காமல் இருக்கவும், ஜன., 13 முதல் 17ம் தேதி வரை, பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது. மற்றொரு புறம், கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளது. இதனால் வண்டலுார் பூங்காவிற்கு, இந்தாண்டு பொங்கல் விடுமுறைக்கு ஏராளமான கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தை சமாளிக்கவும், பார்வையாளர்கள் சிரமமின்றி பூங்காவை சுற்றி பார்க்க வசதியாகவும் தேவையான முன்னேற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. பூங்காவின் இயற்கை சூழல் பாதிக்காமல் தடுக்க, ஜன., 13 முதல் 17ம் தேதி வரை, பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு
நவண்டலுார் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 90 ரூபாய், சிறியவர்களுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. கேமரா வசதி கொண்ட மொபைல் போன்களுக்கு 25, கேமராவுக்கு 250, வீடியோ கேமராவுக்கு 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில், பெரியவர்களுக்கான நுழைவு கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. கேமரா மற்றும் வீடியோ கேமரா கட்டணங்களும் மாற்றப்பட்டுள்ளன. கட்டண உயர்வால், இந்தாண்டு கூட்டம் எதிர்பார்த்த அளவிற்கு வருமா, குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.