/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்டலுார் பூங்கா டிச., 31ல் இயங்கும்
/
வண்டலுார் பூங்கா டிச., 31ல் இயங்கும்
ADDED : டிச 29, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை. அன்று, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிச., 31, செவ்வாய்க்கிழமை, பார்வையாளர்களுக்காக வண்டலுார் பூங்கா திறந்திருக்கும் என, நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.