ADDED : பிப் 14, 2024 12:56 AM
அ நிறம் | அளவு
தாம்பரம், வண்டலுார், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்யக்கோரி, பூங்கா நுழைவாயிலில், நேற்று, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பூங்கா தொழிலாளர் சங்க தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 'ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும்.
எட்டு மணி நேர வேலையை, இரவுப்பணிக்கு அமல்படுத்த வேண்டும். சீருடை, காலணி ஆகியவற்றை தாமதமின்றி வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
