/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வி.ஏ.ஓ., வீட்டில் திருடிய 2 வாலிபர்கள் கைது திட்டம் வகுத்த மனைவி, அக்காவும் சிக்கினர்
/
வி.ஏ.ஓ., வீட்டில் திருடிய 2 வாலிபர்கள் கைது திட்டம் வகுத்த மனைவி, அக்காவும் சிக்கினர்
வி.ஏ.ஓ., வீட்டில் திருடிய 2 வாலிபர்கள் கைது திட்டம் வகுத்த மனைவி, அக்காவும் சிக்கினர்
வி.ஏ.ஓ., வீட்டில் திருடிய 2 வாலிபர்கள் கைது திட்டம் வகுத்த மனைவி, அக்காவும் சிக்கினர்
ADDED : அக் 12, 2024 12:36 AM
படப்பை,
தாம்பரம் அருகே, படப்பை அடுத்த கரசங்கால், ரேடியன்ஸ் ஜேட் கார்டன் பகுதியில் வசிப்பவர் சங்கர் மனைவி ஹேமாவதி, 28; வலையகரணை கிராம வி.ஏ.ஓ.,
கடந்த 7ம் தேதி, காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 51 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி, 5,000 ரூபாய் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
மணிமங்கலம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் பயன்படுத்திய வாகனத்தின் எண் போலியானது என்பது தெரிந்தது.
எனினும், பல பகுதிகளில் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை சேகரித்து, வாகன அடையாளம், வண்ணம் ஆகியவற்றை கொண்டு தொடர்ச்சியாக தேடியதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை, போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து, மதுரையில் பதுங்கியிருந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த லோகேஷ், 23, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திவாகர், 35, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும், திருட்டு தொழிலில் கிடைக்கும் நகைகளை விற்று சொகுசு வாழ்க்கை வாழ, திவாகரின் மனைவி நித்யாரூபி, 37, திட்டம் வகுத்து கொடுத்ததும், திருடப்பட்ட நகைகளை விற்று பணம் வாங்க அவரது சகோதரி ராதிகா, 43, உதவியதும் தெரிந்தது. இதையடுத்து, இவர்கள் இருவரையும், போலீசார் கைது செய்தனர்.
திருடுபோனவற்றில் 32 சவரன் நகைகள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இவர்களிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.