/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வி.ஏ.ஓ., அலுவலகம் நுாலகம் திறப்பு
/
வி.ஏ.ஓ., அலுவலகம் நுாலகம் திறப்பு
ADDED : நவ 22, 2024 12:08 AM
நெற்குன்றம்,
நெற்குன்றத்தில், 50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, வி.ஏ.ஓ., அலுவலகம், அங்கன்வாடி மையம் மற்றும் நுாலகம் அடங்கிய கட்டடம் திறக்கப்பட்டது.
சென்னை நெற்குன்றம் வாஞ்சிநாதன் தெருவில், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
இதையடுத்து, மதுரவாயல் தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கிய, 50 லட்சம் ரூபாயில், கீழ் தளத்தில் கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி மையம், முதல் தளத்தில் நுாலகம் ஆகியவை கட்டப்பட்டன.
கட்டட பணிகள் முடிந்த நிலையில், நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. கட்டடத்தை, தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி திறந்து வைத்தார். இதில், மண்டல குழு தலைவர் ராஜன், அ.ம.மு.க., கவுன்சிலர் கிரிதரன், மண்டல உதவி கமிஷனர் உமாபதி, செயற்பொறியாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.