/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரதராஜபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் பற்றாக்குறையால் அவதி
/
வரதராஜபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் பற்றாக்குறையால் அவதி
வரதராஜபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் பற்றாக்குறையால் அவதி
வரதராஜபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் பற்றாக்குறையால் அவதி
ADDED : ஏப் 15, 2025 12:45 AM
பூந்தமல்லி, பூந்தமல்லி ஒன்றியத்தில், வரதராஜபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, ராஜிவ் தெரு, பாடசாலை தெரு, ஸ்டாலின் தெரு, அம்பேத்கர் தெரு, கக்கன்ஜி தெரு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக தெருக் குழாய்களில் தண்ணீர் சரிவர வரவில்லை.
காலை அரை மணி நேரம் மட்டும், தண்ணீர் குறைந்த வேகத்தில் வந்து நின்று விடுகிறது. போதிய தண்ணீர் கிடைக்காததால், அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், குடிநீர் அல்லாத பிற தேவைகளுக்கும், விலை கொடுத்து கேன் வாட்டர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, தடையின்றி தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.