/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
64 சக்தி ரூபங்களில் வாராஹி திருக்காட்சி
/
64 சக்தி ரூபங்களில் வாராஹி திருக்காட்சி
ADDED : ஜன 04, 2025 12:39 AM

மயிலாப்பூர்,உலக நன்மைக்காக, சென்னையில் இயங்கி வரும் அன்னை வாராஹி அறக்கட்டளையின் சார்பில், உலக நன்மைக்காகவும், மக்கள் துயர் தீர்க்கவும், 64 சக்தி ரூபங்களில் வாராஹி திருகாட்சி துவங்கியுள்ளது.
மயிலாப்பூர், தெற்கு மாடவீதி, வள்ளல் விநாயக முதலியார் பொம்மை சத்திரத்தில் முதல் நாளான நேற்று காலை, விநாயகர் பூஜையுடன் துவங்கி, கலச ஸ்தாபனம் நடந்தது.
பின், 64 வகை வாராஹி திருக்காட்சி படுத்தும் நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து, 1,008 புடவைகளால் வாராஹி சகஸ்ரநாமம் செய்யப்பட்டது.
கணபதி ஹோமத்தை தொடர்ந்து, நவக்கிரஹ ஹோமம், காரியசித்தி, வித்யா வாராஹி ஹோமங்கள் நடத்தப்பட்டன.
நேற்று மாலை மாணவ, மாணவியர் கல்வியில் மேம்பட, வாக்ஹதினி வித்யா வாராஹி பூஜை நடத்தப்பட்டது. அதையடுத்து, ஆண்டாள் திருக்கல்யாணம், கானஸ்மிருதி பஜன் மண்டலி நடந்தது.
இரண்டாம் நாளான இன்று காலை 8:00 மணி முதல் யாகம், கல்யாண வாராஹி, சந்தான வாராஹி யாகம் நடக்கிறது. மாலை திருப்பாவை, அஞ்சன மாருதி பஜன் மண்டலி நடக்கிறது.
நாளை காலை தேவி மகாத்மிய பாராயணம், காலை 9:00 மணிக்கு, 64 வகை மூலிகைகள், மந்திரங்களால் வாராஹி யாகம், சாஸ்தா யாகம் நடத்தப்படுகிறது.
மாலையில் வாராஹி ஆபரண பூஜை, திருப்பாவை, இஸ்கான் சென்னை பக்தர்களின் பூஜைகள் நடக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

