/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்தநாள்: காங்கிரசார் கொண்டாட்டம்
/
வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்தநாள்: காங்கிரசார் கொண்டாட்டம்
வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்தநாள்: காங்கிரசார் கொண்டாட்டம்
வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்தநாள்: காங்கிரசார் கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2024 03:03 PM

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 85-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், செயல் தலைவர் கே.ஜெயக்குமார், தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, கேக் வெட்டி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் தளபதி எஸ்.பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர்கள் உ.பலராமன், ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆர். ராம சுகந்தன், பொதுச்செயலாளர் பி.வி.தமிழ்ச்செல்வன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மீனவரணி அணி தலைவர் ஜோர்தான், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம்,
டில்லி பாபு, நிர்வாகிகள் எஸ்.எம்.குமார், சுமதி அன்பரசு, அகரம் கோபி, திருவான்மியூர் மணோகரன், வனிதா சுப்பிரமணி, கொடுங்கையூர் ரஜினி செல்வம், மலர்கொடி, சூளை ராஜேந்திரன், வழக்கறிஞர் நரேஷ் குமார், ஞானவேல், ரஞ்சித் குமார், சுரேஷ் பாபு, மா.வே.மலையராஜா, சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.