/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு வி.சி., கட்சியினர் கைது
/
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு வி.சி., கட்சியினர் கைது
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு வி.சி., கட்சியினர் கைது
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு வி.சி., கட்சியினர் கைது
ADDED : செப் 22, 2024 06:50 AM

அமைந்தகரை : அமைந்தகரையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர், நேற்று கைது செய்யப்பட்டனர்.
அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அரசின் 'டாஸ்மாக்' கடை திறப்பதற்கான பணிகள் நடந்து வந்துள்ளன. பி.பி., கார்டன் உள்ளிட்ட பகுதிவாசிகள் இதையறிந்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று கடை திறக்கப்பட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த வி.சி., கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், கடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'இதே பகுதியில் புல்லா அவென்யூவில் டாஸ்மாக் கடை இருக்கும் போது, எதற்கு புதிய கடை' என கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட, 10க்கும் மேற்பட்டோரை, அமைந்தகரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து 'டாஸ்மாக்' நிர்வாக அதிகாரிகள் கூறுகையில்,'அமைந்தகரையில் புதிதாக 'டாஸ்மாக்' கடை திறக்கவில்லை. வில்லிவாக்கம் பகுதியில் கடை இயங்கிய கட்டடம் இடிக்கப்பட்டதால், அக்கடையை அமைந்தகரைக்கு மாற்றி அமைத்துள்ளோம்,'' என்றார்.