ADDED : மார் 25, 2026 06:30 PM
சென்னை:சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதியை கேட்டு வி.சி., கட்சி, தி.மு.க., நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தி.மு.க., கூட்டணியில், வி.சி.,வுக்கு ஆறு தனி தொகுதிகள், இரண்டு பொது தொகுதிகள் என எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
கடந்த 2021ல் திருப்போரூர், நாகை ஆகிய இரு பொது தொகுதிகளிலும் வி.சி., வென்றது. நாகை தொகுதியில் வென்ற வி.சி., துணைப் பொதுச்செயலர் ஆளூர ஷாநவாஸ், இந்த முறை சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால், அத்தொகுதியை வி.சி., கேட்டுள்ளது.
ஆனால், வி.சி.,வுக்கு ராயபுரம் தொகுதியை ஒதுக்க, தி.மு.க., முன்வந்துள்ளது. ராயபுரத்தில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், எட்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதனால், வி.சி., தயங்குவதாகவும், ராயபுரத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிகம் இருப்பதால் வெற்றி பெறலாம் என, தி.மு.க., சமாதானப்படுத்தி வருவதாகவும், அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
