ADDED : மார் 19, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
துரைப்பாக்கம்: ஓ.எம்.ஆர்., கந்தன்சாவடி, சந்தோஷ் நகரில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அப்பகுதி மக்கள் புகாரில், கடந்த ஆண்டு அக்., மாதம், டாஸ்மாக் அதிகாரிகள் கடையை பூட்டினர். இந்நிலையில்,நேற்று மீண்டும் கடை திறக்கப்பட்டது. கடையை மூட வலியுறுத்தி, வி.சி., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துரைப்பாக்கம் போலீசார், நீதிமன்றம் உத்தரவின்படி, கடையை திறந்ததாக கூறினர்.
இதை கேட்டு அவர்கள் சமாதானம் அடையவில்லை. அதன்பின், கந்தன்சாவடி பகுதி தி.மு.க., நிர்வாகிகள் சிலர், அவர்களிடம் பேச்சு நடத்தினர். 'கடை தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறியதை அடுத்து, வி.சி., கட்சியினர் கலைந்து சென்றனர்.
