/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீராங்கால் கால்வாய் பக்கவாட்டு சுவர் கட்ட திட்ட மதிப்பீடு
/
வீராங்கால் கால்வாய் பக்கவாட்டு சுவர் கட்ட திட்ட மதிப்பீடு
வீராங்கால் கால்வாய் பக்கவாட்டு சுவர் கட்ட திட்ட மதிப்பீடு
வீராங்கால் கால்வாய் பக்கவாட்டு சுவர் கட்ட திட்ட மதிப்பீடு
ADDED : டிச 09, 2024 02:58 AM
வேளச்சேரி:அடையாறு மண்டலம், 176வது வார்டு, வேளச்சேரி ஏரி மற்றும் ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், வீராங்கால் கால்வாய் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது. வேளச்சேரி ஏரியில் இருந்து செல்லும் கால்வாய், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூடு கால்வாயாக மாற்றப்பட்டது.
ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து செல்லும் கால்வாய், திறந்த நிலையில் உள்ளது. இதோடு, பக்கவாட்டு தடுப்பு சுவர் சாலை மட்டத்தில் இருந்த ஒரு அடி உயரமாக உள்ளதால், வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்போது கால்வாயை ஒட்டி உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுகின்றன.
கால்வாயின் சில பகுதி பக்கவாட்டு சுவர் வலுவிழந்து இருப்பதுடன், உயர்த்தி அமைக்க வேண்டி இருந்தது. நீர்வளத்துறையிடம் இருந்த இந்த கால்வாய், பராமரிப்புக்காக, கடந்த மாதம் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, கால்வாய் சுவரை வலுவாக்கி, உயர்த்தி கட்ட முடிவு செய்து, 1.97 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பணி, பருவமழை முடிந்த பின் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.