UPDATED : ஜூலை 14, 2026 04:09 PM
ADDED : ஜூலை 14, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
சென்னை:எழும்பூர் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக, 23 லட்சம் ரூபாய் செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய காய்கறி அங்காடி அமைக்கப்பட்டு வருகிறது.
எழும்பூர் ஆயுதப்படை வளாகத்தில், 1,000க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்கள் வசதித்து வருகின்றன. இங்கு, காவலர் அங்காடி உள்ளது.
அங்கு புதிதாக, 23 லட்சம் ரூபாய் செலவில், குளிர்சாதன வசதியுடன் கூடிய அங்காடி அமைக்கப்பட்டு வருகிறது. ஓரிரு வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என, போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
