/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைவு
/
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைவு
ADDED : ஜன 22, 2024 01:31 AM
சென்னை:சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறி விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. கோயம்பேடு சந்தைக்கு தினமும் 55 லட்சம் கிலோ காய்கறி வந்த இடத்தில், நேற்று 70 லட்சம் கிலோ காய்கறிகள் வந்தன.
ஆனால், விற்பனை மந்தமாக உள்ளதால், காய்கறி விலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அனைத்து காய்கறிகளும் கடந்த வாரத்தை விட 10 -- 20 ரூபாய் குறைந்துள்ளது.
இதில், முருங்கைக்காய் கிலோ 140 -- 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 65 -- 70 ரூபாய்க்கும் விற்பனையானது. பிற காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளன.