/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி, போலீசாரின் அலட்சியத்தால் பிரதான சாலையில் வாகன ஆக்கிரமிப்பு
/
மாநகராட்சி, போலீசாரின் அலட்சியத்தால் பிரதான சாலையில் வாகன ஆக்கிரமிப்பு
மாநகராட்சி, போலீசாரின் அலட்சியத்தால் பிரதான சாலையில் வாகன ஆக்கிரமிப்பு
மாநகராட்சி, போலீசாரின் அலட்சியத்தால் பிரதான சாலையில் வாகன ஆக்கிரமிப்பு
ADDED : செப் 02, 2025 02:18 AM

கே.கே.நகர்:மாநகராட்சி மற்றும் போலீசாரின் அலட்சியத்தால், கே.கே.நகர் மற்றும் வளசரவாக்கம் பகுதி பிரதான சாலையில் வாகன ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக, குற்றச்சாட்டு வலுத்துள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம் கே.கே.நகர் மற்றும் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையை இணைக்கும் பிரதான சாலையாக, ராஜமன்னார் சாலை உள்ளது.
பேருந்து வழித்தட சாலையாக உள்ள இந்த சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதையடுத்து, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதுடன், புது மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. வடிகால்வாய் அமைக்க, சாலையின் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் மற்றும் பொது கழிப்பறை, அம்மா உணவகம் உள்ளிட்டவை இடிக்கப்பட்டன.
தற்போது, இப்பகுதியில் ஆட்டோக்கள், லோடு வேன்கள், மினி லாரிகள் உள்ளிட்ட பல வாகனங்கள், வரிசையாக ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தள்ளுவண்டி கடைகளும் அதிகரித்துள்ளன. இதனால், சாலை மீண்டும் குறுகலாகி உள்ளது.
ஆலப்பாக்கம் சாலை அதேபோல், வளசரவாக்கம் ஆற்காடு சாலை மற்றும் மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் ஆலப்பாக்கம் பிரதான சாலையிலும் தனியார் கழிவுநீர் லாரிகள் உள்ளிட்டவை நிறுத்துவதால் நெரிசல் ஏற்படுகிறது.
இப்பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளால் விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.