/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிவானந்தா சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்
/
சிவானந்தா சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்
ADDED : பிப் 05, 2024 01:43 AM

திருவல்லிக்கேணி:வடசென்னையில் இருந்து அண்ணாசாலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், எழிலகம் அருகே சென்று சேப்பாக்கம், திருவல்லிக்கேணி வழியாக செல்கின்றனர். அதே போல், எழிலகம் வருவதற்கு முன், சுவாமி சிவானந்தா சாலை வழியாகவும் அண்ணா சாலைக்குச் செல்லலாம்.
சுவாமி சிவானந்தா சாலையில் கார், சரக்கு வேன், இரு சக்கர வாகனங்கள் ஆகியவை மட்டும் செல்லும் இடமாக உள்ளது. இந்த சாலை வழியாக பலர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கும் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சாலை முழுதும் தற்போது, தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, தனியார் பேருந்துகளும், கனரக வாகனங்களும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நிறுத்தப்படுவதால், இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சாலையும் குறுகி உள்ளது. இரவு நேரங்களிலும் இங்கு வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன. சில வாகனங்கள், மாதக்கணக்கில் அங்கேயே நிற்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வாகனங்களின் மறைவைப் பயன்படுத்தி, இப்பகுதியில் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே, போக்குவரத்து போலீசார் இதை கவனித்து, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

