ADDED : ஜன 29, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.நகர்:ராயபுரம், ஆதம் சாகித் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 32. இவர், தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகரில், மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இரண்டு சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றின் கண்ணாடிகளை, மர்ம நபர்கள் நேற்று அடித்து நொறுக்கி உள்ளனர்.
இதுகுறித்து, ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.