/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் திடீரென 'மெகா' பள்ளம் பிராட்வேயில் திணறிய வாகனங்கள்
/
சாலையில் திடீரென 'மெகா' பள்ளம் பிராட்வேயில் திணறிய வாகனங்கள்
சாலையில் திடீரென 'மெகா' பள்ளம் பிராட்வேயில் திணறிய வாகனங்கள்
சாலையில் திடீரென 'மெகா' பள்ளம் பிராட்வேயில் திணறிய வாகனங்கள்
ADDED : நவ 23, 2025 04:11 AM

பிராட்வே: போக் குவரத்து நெரிசல் மிகுந்த பிரகாசம் சாலையில், திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் தடுமாறினர்.
பிரகாசம் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சாலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு திடீரென பெரிய பள்ளம் விழுந்தது.
இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திடீரென தடுமாறினர். பின் சுதாரித்து, பள்ளத்தை விட்டு தள்ளி சென்றனர்.தகவலறிந்து, முத்தியால்பேட்டை போக்குவரத்து போலீசார் அங்கு வந்தனர்.
திடீர் பள்ளத்தை சுற்றி தடுப்பு அமைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடுத்தனர்.
பின், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். எதனால் திடீர் பள்ளம் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
போக்குவரத்து அதிகமுள்ள சாலை என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இரவு நேரத்தில் பள்ளம் சரி செய்யப்படும் என, அதிகாரிகள் கூறினர்.