ADDED : மார் 19, 2024 12:38 AM

அ நிறம் | அளவு
குன்றத்துார்,
வண்டலுார்-- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையோரம் வண்டலுார் அருகே மண்ணிவாக்கம் முதல் பூந்தமல்லி வரை ஏராளமான உணவகங்கள் அமைந்துள்ளன.
இங்கு வரும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் வெளிவட்ட சாலையோரம் பைக், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்தி செல்கின்றனர். இதனால், நெரிசலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே, பார்க்கிங் வசதி இல்லாமல் இயங்கும் உணவகத்தை தடை செய்ய வேண்டும். மேலும், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
