/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி ஐ.டி., ஊழியர் வீட்டில் 60 சவரன் ஆட்டை
/
வேளச்சேரி ஐ.டி., ஊழியர் வீட்டில் 60 சவரன் ஆட்டை
ADDED : ஜன 13, 2024 12:02 AM
வேளச்சேரி, வேளச்சேரி, கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் நாச்சியம்மாள், 43; நாவலுாரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகாததால், தாயுடன் வசித்து வருகிறார்.
கடந்த 7ம் தேதி நாச்சியம்மாள், தன் தாயுடன் சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்குச் சென்றுள்ளார்.
நேற்று இவரது வீட்டின் அருகே வசிப்போர், நாச்சியம்மாள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து தகவல் தெரிவித்து உள்ளனர்.
அதிர்ச்சியான நாச்சியம்மாள், இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர். இதில், நாச்சியம்மாள் வீட்டில் இருந்து, 60 சவரன் நகை மற்றும் 10,000 பணம் திருடு போனது தெரிந்தது.
சென்னை திரும்பிய நாச்சியம்மாள் அளித்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.