ADDED : ஜன 12, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பொங்கல் தினத்தை முன்னிட்டு, வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி நிர்வாகம், 'கிராமிய கலை விழா - சீர்மிகு சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அம்பத்துார், கள்ளிக்குப்பம், ஆனந்தம் இல்லத்தில் நாளை மாலை 3:00 மணிக்கு இவ்விழா நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில், பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.ஆர்.ரைஹானா, கவிதா ராமு, வி.ஜி.சந்தோசம், நடிகர் செந்தில், வேல் மோகன் ஆகிய பிரபலங்கள் தலைமை வகிக்கின்றனர்.
சிறந்த மக்கள் இசை கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக, மதிச்சியம் பாலா, சுந்தரமூர்த்தி மற்றும் முத்துச்சிற்பி ஆகியோருக்கு 'மண்ணின் குரல்' விருது வழங்கப்படுகிறது.