/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி வேலம்மாள் மாணவி தேர்வு
/
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி வேலம்மாள் மாணவி தேர்வு
ADDED : மே 26, 2025 02:36 AM

சூரப்பட்டு:வேலம்மாள் நியூஜென் பள்ளி மாணவி, தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்று, சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.
சூரப்பட்டு வேலம்மாள் நியூஜென் பள்ளி 10ம் வகுப்பு மாணவி ஆருஷி, எட்டு ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர், தமிழகம், உத்தர பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த ஒன்பது தேசிய அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில், வெற்றிகள் குவித்து சர்வதேச போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''என் பயணத்தில், வேலம்மாள் பள்ளி எப்போதும் ஆதரவாக இருந்தது,'' என்றார்.
தற்போது, மதுரையில் நடந்த எஸ்.எஸ்.எப்.ஐ., எனும் தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார்.
இதை அடிப்படையாக வைத்து, பாரத் ஸ்கேட்ஸ் மற்றும் எஸ்.எஸ்.எப்.ஐ., இணைந்து நடத்தும் சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆருஷி தேர்வாகியுள்ளார். இந்த போட்டி, வரும் 30ம் தேதி வரை இந்தோனேஷியாவில் நடக்கிறது.