/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவண்ணாமலை அணியிடம் சுருண்டது வேலுார் 'யு - 12' கிரிக்கெட் போட்டியில் அபாரம்
/
திருவண்ணாமலை அணியிடம் சுருண்டது வேலுார் 'யு - 12' கிரிக்கெட் போட்டியில் அபாரம்
திருவண்ணாமலை அணியிடம் சுருண்டது வேலுார் 'யு - 12' கிரிக்கெட் போட்டியில் அபாரம்
திருவண்ணாமலை அணியிடம் சுருண்டது வேலுார் 'யு - 12' கிரிக்கெட் போட்டியில் அபாரம்
ADDED : டிச 30, 2024 01:14 AM
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், தாகூர் கோப்பைக்கான முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடக்கிறது. 12 வயதிற்கு உட்பட்டோருக்கான இப்போட்டிகள், ஆவடி, ஓ.சி.எப்., மைதானத்தில் நடக்கின்றன.
இதில், சென்னை, செங்கல்பட்டு, வேலுார், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட 30க்கும் மேற்பட்ட மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.
போட்டிகள் 'லீக்' மற்றும் 'சூப்பர் லீக்' அடிப்படையில் நடக்கின்றன. இதில், நேற்று முன்தினம் நடந்த 'லீக்' போட்டியில், திருவண்ணாமலை அணியை எதிர்த்து, வேலுார் மாவட்ட அணி களமிறங்கியது.
முதலில் பேட் செய்த வேலுார் அணி, திருவண்ணாமலை வீரர்களின் அபார பந்துவீச்சில் ரன் எடுக்க திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 31.4 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 48 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து களமிறங்கிய திருவண்ணாமலை அணி, 7.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு 'லீக்' போட்டியில், திருவள்ளூர் அணி 147 ரன்கள் வித்தியாசத்தில், செங்கல்பட்டு அணியை வீழ்த்தியது.
இதுவரை நடந்த 'லீக்' போட்டிகளில், திருவண்ணாமலை அணி பந்து வீச்சாளர் திஷாந்த், அதிகபட்சமாக 13 விக்கெட்டுகள் கைப்பற்றி, முதலிடத்தில் உள்ளார். பேட்டிங்கில், 226 ரன்கள் குவித்து, திருவள்ளூர் வீரர் கைலாஷ் முதலிடத்தில் உள்ளார்.