/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி வேப்பேரி அணி அபார வெற்றி
/
டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி வேப்பேரி அணி அபார வெற்றி
டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி வேப்பேரி அணி அபார வெற்றி
டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி வேப்பேரி அணி அபார வெற்றி
ADDED : செப் 18, 2025 06:17 PM
சென்னை,: சென்னையில் நடக்கும் ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், வேப்பேரி அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆடவருக்கான ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், வேப்பேரி கிரிக்கெட் கிளப் அணி, வெங்கட் கிரிக்கெட் கிளப் அணியை எதிர்த்து மோதியது.
டாஸ் வென்ற வெங்கட் சி.சி., அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த வேப்பேரி அணிக்கு, பிரான்சிஸ் பிராங்க்போர்ட், 34, அரவிந்த், 33 ரன்கள் எடுத்துஒ நல்ல துவக்கம் தந்தனர்.
தொடர்ந்து அந்தோணி மான்போர்ட் 41, பிரபு 31 ரன்கள் எடுத்தனர். முடிவில் அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்தது.
எளிதான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய வெங்கட் சி.சி., அணிக்கு துவக்கமே அதிர்ச்சியை அளித்தது. துவக்க ஆட்டக்காரர் களான பத்ம நாபன் 0, திவேஷ் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
மற்ற வீரர்களும் வேப்பேரி அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 30.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டு களையும் இழந்து 64 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதனால் வேப்பேரி அணி, 109 ரன்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது.