ADDED : பிப் 11, 2026 06:10 AM
சென்னை, பாரிமுனை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட த.வெ.க., நிர்வாகிகள் மீது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள், அராஜக தாக்குதல் நடத்தியிருப்பது, கடும் கண்டனத்திற்குரியது. தாக்குதலில், நான்கு மாத கர்ப்பிணி உட்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், நான்கு பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.
த.வெ.க.,வுக்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கை, பொறுத்துக் கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், இவ்வாறான வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். தி.மு.க.,வின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜக தாக்குதலில் ஈடுபட்ட ஆளும்கட்சிக்கு, வரும் சட்டசபை தேர்தலில், தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்.
- விஜய், த.வெ.க., தலைவர்
