/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க., பிரமுகர் காரில் சரவெடி வீசிய விஜய் ரசிகர்
/
அ.தி.மு.க., பிரமுகர் காரில் சரவெடி வீசிய விஜய் ரசிகர்
அ.தி.மு.க., பிரமுகர் காரில் சரவெடி வீசிய விஜய் ரசிகர்
அ.தி.மு.க., பிரமுகர் காரில் சரவெடி வீசிய விஜய் ரசிகர்
ADDED : நவ 10, 2025 01:34 AM

அம்பத்துார்: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல், நேற்று முன்தினம் மாலை, தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
அதேபோல், அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் அருகில் உள்ள ராக்கி திரையரங்கிலும், அப்படத்தின் முதல் பாடல் திரையிடப்பட்டது.
அதனை காண, அவரது ரசிகர்கள் 500க்கும் மேற்பட்டோர் திரையரங்கில் திரண்டனர்.
இதனிடையே, பாடல் வெளியாவதற்கு முன், திரையரங்கு வாயலில் விஜயின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது, ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியில், சரவெடியை பற்றவைத்து, கையில் எடுத்து தலைக்கு மேல் சுற்றினார். அது, அங்கிருந்தவர்கள் மீது விழுந்தது.
இதனால், அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின், அந்த ரசிகர், சரவெடியை அருகில் சென்ற சாலையில் துாக்கி வீசினார். அது, அவ்வழியாக வந்த அ.தி.மு.க., பிரமுகரின் கார் மீது விழுந்தது.
இதை கண்ட அந்த ரசிகர் ஓட்டம் பிடிக்க, அ.தி.மு.க., பிரமுகர் காரை விட்டு இறங்கி, தனது கார் மீது சரவெடியை வீசிய நபரை தேடினார். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

