/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஜய் கட்சி வாலிபர் கொலை வழக்கில் கைது
/
விஜய் கட்சி வாலிபர் கொலை வழக்கில் கைது
ADDED : அக் 10, 2025 08:02 AM
சென்னை; கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த, விஜயின் த.வெ.க.,வை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் அரவிந்தன், 24; தனியார் நிறுவன தொழிலாளி. கடந்த மாதம் 2ம் தேதி, கொளத்துாரில் உறவினர் இறப்பு நிகழ்விற்கு சென்றார்.
சுடுகாட்டில் ஏற்பட்ட தகராறில், அரவிந்தன் தாக்கப்பட்டார். வீடு திரும்பிய சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து திரு.வி.க., நகர் போலீசார் வழக்கு பதிந்து, ஏற்கனவே மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கில் தலைமறைவாக இருந்த, கொளத்துார் அன்னை சத்யா நகரை சேர்ந்த மதன்குமார், 34 என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். இவர், நடிகர் விஜயின் த.வெ.க.,வில் உறுப்பினராக உள்ளார்.