sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஒரு மாதத்திற்கு பின் அரசியல் நிகழ்வு: செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் இன்று பங்கேற்பு

/

 ஒரு மாதத்திற்கு பின் அரசியல் நிகழ்வு: செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் இன்று பங்கேற்பு

 ஒரு மாதத்திற்கு பின் அரசியல் நிகழ்வு: செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் இன்று பங்கேற்பு

 ஒரு மாதத்திற்கு பின் அரசியல் நிகழ்வு: செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் இன்று பங்கேற்பு

6


ADDED : ஜன 25, 2026 05:53 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:53 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இன்று நடக்கும் த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், கூட்டணி தொடர்பான முக்கியமான அறிவிப்புகளை, அக்கட்சித் தலைவர் விஜய் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல், கரூர் உயிர் பலி சம்பவம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணை காரணமாக, கடந்த ஒரு மாதமாக எவ்வித அரசியல் நிகழ்ச்சிகளிலும் விஜய் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், இன்று நடக்கும் செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார்.

அந்த கூட்டம் தொடர்பாக த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:

அடுத்த மூன்று மாதத்திற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து, இன்றைய கூட்டத்தில் விஜய் அறிவுறுத்த உள்ளார்; அதோடு, தலைமை நிர்வாகிகள் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தின் விபரங்களையும் வெளியிட உள்ளார்.

குறிப்பாக, 'ஜனநாயகன்' படத்துக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளின் பின்னணி குறித்து பேசுவதோடு, தி.மு.க., மற்றும் தே.ஜ., கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை உறுதி செய்ய உள்ளார். அடுத்த மாதம் விஜய் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயண விபரங்களும் இன்று வெளியாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

'போலீசாரும், கண்டக்டர்களும் விசில் அடிக்க தடை வரலாம்' த.வெ.க.,வில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி, பனையூர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், கட்சியின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது: பிரதமர் மோடி பங்கேற்ற மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் போடப்பட்ட 60,000 இருக்கைகளில், 10,000 காலி; 20,000 பேர் யார் பேச்சையும் கேட்காமல் துாங்கி விட்டனர். 'தி.மு.க.,-வை அகற்றுவோம்' என்று பிரதமர் பேசியபோது கூட, அங்கு கைத்தட்டல் இல்லை. ஏனென்றால், தி.மு.க.,வை அகற்ற த.வெ.க-.,வால் தான் முடியும். த.வெ.க.,வுக்கு, 'விசில்' சின்னம் கிடைத்திருப்பதால், இனி போலீசாரையும், பஸ் கண்டக்டர்களையும் விசில் அடிக்க வேண்டாம் என்று சொல்லப் போகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். தேர்தல் பிரசார பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: தி.மு.க., தற்போது அ.தி.மு.க-.,வாக மாறி விட்டது. யார் எந்த கட்சியில் இருந்து வெளியே வருவர் என காத்திருந்து, கோழி பிடிக்கும் கட்சியாக மாறி விட்டது. உண்மையான தி.மு.க.,வினர் த.வெ.க.,வுக்கு வந்து விட்டனர். நாங்கள் சி.பி.ஐ., விசாரணைக்கு சென்று வந்ததால், பயந்து விட்டதாக சொல்கின்றனர். ஆனால், 'ரெய்டு' வரும்போது, செந்தில் பாலாஜி அழுதது எல்லாருக்கும் தெரியும். அவர் வாய் திறந்தால், முதல்வர் மாட்டிக் கொள்வார். நாங்கள் ஒன்றும் 50,000 கோடி ரூபாயை சுருட்டி வீட்டில் வைக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us